/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வடிகால் கழிவை அகற்றாமல் அதன் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டி அட்டூழியம் ரோடு என நினைத்து சாக்கடையில் மூழ்கும் கொடுமை வடிகால் கழிவை அகற்றாமல் அதன் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டி அட்டூழியம் ரோடு என நினைத்து சாக்கடையில் மூழ்கும் கொடுமை
வடிகால் கழிவை அகற்றாமல் அதன் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டி அட்டூழியம் ரோடு என நினைத்து சாக்கடையில் மூழ்கும் கொடுமை
வடிகால் கழிவை அகற்றாமல் அதன் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டி அட்டூழியம் ரோடு என நினைத்து சாக்கடையில் மூழ்கும் கொடுமை
வடிகால் கழிவை அகற்றாமல் அதன் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டி அட்டூழியம் ரோடு என நினைத்து சாக்கடையில் மூழ்கும் கொடுமை
ADDED : செப் 04, 2025 04:00 AM

விருதுநகர்: விருதுநகரில் புளுகனுாரணி ரோட்டின் ஓரத்தில் வடிகாலில் தடுப்பு ஏதுமில்லாத நிலையில் தேங்கி நிற்கும் கழிவின் மீது பிளீச்சிங் பவுடரை நகராட்சி ஊழியர்கள் கொட்டியுள்ளனர். அந்த ரோட்டின் ஓரமாக வரும் பாதசாரிகள் ரோடு என நினைத்து பிளீச்சிங் பவுடர் கொட்டிய கழிவு மீது கால் வைத்து சாக்கடையில் விழுகின்றனர்.
விருதுநகரில் புளுகனுாரணி ரோடு என்பது பரபரப்பான பகுதி. பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு என்பதால் வாகன நெரிசல் இருக்கும். இந்நிலையில் பள்ளி அருகே வடிகால் செல்கிறது.
இந்த வடிகால் தற்போது சாக்கடை கழிவுநீர் கலக்கும் இடமாகி விட்டதுடன், மனிதக்கழிவுகளில் துவங்கி, கொடூரமான பழைய நகரக்கழிவுகள் செல்கின்றன. இப்படிப்பட்ட இந்த வடிகால் ரோடு உயர்த்தப்பட்டதாலும், தடுப்புச்சுவர் மறைந்து விட்டதாலும் தற்போது ரோட்டின் மட்டம் வரை உள்ளது.
இந்நிலையில் இதை தடுக்க நவீன உத்தியாக அதனை அகற்றாமல், அதன் மீது பிளீச்சிங் பவுடரை நகராட்சி ஊழியர்கள் கொட்டி சென்றுள்ளனர். இது ஏதோ சிமென்ட் போட்டு பாதியில் விடப்பட்ட ரோடு போன்று காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் நேற்று மட்டும் மூன்று முதல் நான்கு பேர் வரை ரோடு என நினைத்து இதை மிதித்து கழிவுநீர் குவியலுக்குள் மூழ்கி உள்ளனர். இந்த கழிவில் மிகவும் மோசமான, உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் கிருமிகள் வருகின்றன. இது திறந்த நிலையில் இருப்பதே தொற்று அபாயம். இந்நிலையில் இதில் மக்கள் விழுவது மேலும் துரதிர்ஷ்டம்.
நகராட்சியின் சுகாதாரப்பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகெட்டி மவுனியாக உள்ளது.
மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அருகே பள்ளிகள் வேறு உள்ளது. சிறு குழந்தைகள் தவறி விழுந்தாலும் நிச்சயம் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
அந்தளவுக்கு வடிகால் ஆழமாக உள்ளது. அலட்சியமாக செயல்படும் நகராட்சி சுகாதாரப்பிரிவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதில் விழாவில் இருக்க தடுப்பு சுவர் ஏற்படுத்த வேண்டும்.