/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ யாரும் வலியுறுத்தாமல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியவர் முதல்வர் யாரும் வலியுறுத்தாமல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியவர் முதல்வர்
யாரும் வலியுறுத்தாமல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியவர் முதல்வர்
யாரும் வலியுறுத்தாமல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியவர் முதல்வர்
யாரும் வலியுறுத்தாமல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியவர் முதல்வர்
ADDED : ஜூலை 05, 2025 02:56 AM
சாத்துார: அஜித்குமார் இறப்பு சம்பவத்தை யாரும் வலியுறுத்தாமல் முதல்வர் சி.பி.ஐ.,க்கு மாற்றியுள்ளார், என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சாத்துார் தென்வடல் புதுத்தெருவில் ஓரணியில் தமிழ்நாடு தி.மு.கவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை செயலி மூலம் இணைத்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது: பட்டா மாறுதல் ஆகவில்லை முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ., வானதி சீனிவாசன் எம். எல். ஏ.,தமிழகத்தில் மத்திய அரசு ஹிந்தி மொழியை கட்டாயப்படுத்தி நுழைக்கவில்லை எனக் கூறுவதை தமிழக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அ.தி.மு.க ஜெயக்குமார் அஜித்குமாரின் ஆன்மா தி.மு.க. வுக்கு சாபம் விடும் எனக் கூறியுள்ளார். லாக் அப் டெத் சம்பவத்தை அறிந்த உடன் முதல்வர் அவரின் குடும்பத்திற்கு அலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் தற்போது சிறையில் உள்ளனர். யாரும் வலியுறுத்துவதற்கு முன்பே சி.பி.ஐ , விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோன்று துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பதால் இறந்தவரின் ஆன்மா தி.மு.க சாபம் விடாது. அடுத்த மாதம் சிறப்பு முகாம் நடத்தி மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்படும் இதற்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். என்றார்.அவருடன் நகர ஒன்றிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.