ADDED : ஜன 05, 2024 05:25 AM

விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும், அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கவும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நிர்வாகி மாரிசெல்வம் வரவேற்றார். நிர்வாகிகள் செல்வக்குமார், சுப்பையா பங்கேற்றனர்.