/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேசிய நெடுஞ்சாலைத்துறை கணக்கீட்டின் படியே இழப்பீடு தாசில்தார் விளக்கம்தேசிய நெடுஞ்சாலைத்துறை கணக்கீட்டின் படியே இழப்பீடு தாசில்தார் விளக்கம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை கணக்கீட்டின் படியே இழப்பீடு தாசில்தார் விளக்கம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை கணக்கீட்டின் படியே இழப்பீடு தாசில்தார் விளக்கம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை கணக்கீட்டின் படியே இழப்பீடு தாசில்தார் விளக்கம்
ADDED : ஜன 05, 2024 10:57 PM
விருதுநகர்:நான்கு வழிச்சாலை நில எடுப்பு விவகாரத்தில் குளறுபடி செய்ததாக வருவாய்த் துறையினர் சிலர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார் ரங்கசாமி பரிந்துரைத்திருந்தார். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இது குறித்து தாசில்தார் மாரிமுத்து கூறியதாவது: கையகப்படுத்தப்படும் நிலங்களில் உள்ள கட்டடத்திற்கு இழப்பீடு வழங்கும் போது, இரு மடங்காக வழங்கப்படும். சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து இரு கட்டடங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அதில் ஒரு கட்டடத்திற்கான இழப்பீடு ரூ. 9.80 லட்சம். மற்றொன்றிற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் மதிப்பீட்டின் படி மதிப்பு ரூ.70 லட்சத்து 38 ஆயிரத்து 342. இதை இரு மடங்காக்கி ரூ.80 லட்சத்து 18 ஆயிரத்து 342 என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் கையொப்பமிட்ட கடிதத்தை சிறப்பு டி.ஆர்.ஓ.,வுக்கு தாசில்தார் அனுப்பி விடுவார். இதில் வருவாய்த்துறை தவறு ஏதுமில்லை. அதன்படியே ரூ.80 லட்சத்து 18 ஆயிரத்து 342 இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டடம் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த வேண்டிய நில எல்லைக்குள் இல்லை. எனவே அதற்கான இழப்பீட்டை திருப்பி வழங்க நில உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.
நில உரிமையாளருக்கு தரப்பட்ட தொகை ரூ.30 லட்சம் அவரது வங்கிக்கணக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீடும் தேசிய நெடுஞ்சாலை கணக்கில் தான் உள்ளது. எனவே ரூ. 4 லட்சம் கட்டடத்திற்கு ரூ. 80 லட்சம் வழங்கப்படவில்லை. ரூ.40 லட்சத்து 9 ஆயிரத்து 171 மதிப்பிடப்பட்ட கட்டடத்திற்கு தான் ரூ.80 லட்சத்து 18 ஆயிரத்து 342 இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது, என்றார்.