/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருச்சுழியில் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு திருச்சுழியில் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு
திருச்சுழியில் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு
திருச்சுழியில் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு
திருச்சுழியில் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு
ADDED : ஜூன் 02, 2025 12:26 AM
திருச்சுழி: திருச்சுழியில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை நீதிபதி ஆய்வு செய்தார்.
திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகில் பல்வேறு வசதிகளுடன் கூடிய உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை திருச்சுழி உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி யோகேஸ்வரன் ஆய்வு செய்தார். கட்டடத்தில் செய்யப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின் திருச்சுழி நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையத்தின் சார்பாக நடந்த மரம் நடு விழாவில் கலந்து கொண்டு புதியதாக நீதிமன்றங்கள் அமைய உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் திருச்சுழி வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் விக்னேஷ் பாண்டியன், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.