Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்

நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்

நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்

நிழற்குடையின்றி அவதி, மின்கம்பத்தால் சிரமம்; வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு குறைகள்

ADDED : ஜன 08, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
வத்திராயிருப்பு : நிழற்குடை இன்றி அவதி, தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் சிரமம், வாறுகாலில் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை, பெண்கள், ஆண்கள் சுகாதார வளாகம் இல்லாமல் அவதி, குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை போன்ற சிரமங்களை சந்தித்து வருகின்றனர் வத்திராயிருப்பு பேரூராட்சி 5வது வார்டு மக்கள்.

வத்திராயிருப்பு நாடார் பஜார், நாடார் தெரு, வி.பி. வடக்கு தெரு ஆகிய பகுதிகளை கொண்ட இந்த வார்டு.

நாடார் பஜாரில் பஸ் ஸ்டாப் இருந்தும் நிழற்குடை இல்லாததால் வெயிலுக்கும், மழைக்கும் மக்கள் தவிக்கின்றனர்.

பஜாரில் இருந்து தெருவிற்கு செல்லும் ரோட்டில் உள்ள வாறுகால்களில் கழிவுகள் தேங்கி கொசுத்தொல்லை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.

தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் போடப்பட்டிருந்தாலும், வாறுகால் அடைப்புகளில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுகாதார வளாகம் இல்லாமல் அடுத்த தெருவில் உள்ள சுகாதார வளாகங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

நாடார் தெருவின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் ஆட்டோக்கள் சென்றுவர முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டாலும் அந்த குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் மக்கள் மினரல் குடிநீர் விலை கொடுத்து வாங்கும் நிலை காணப்படுகிறது.

வேண்டும் தாமிரபரணி குடிநீர்


-ராஜலட்சுமி, குடியிருப்பாளர்: தற்போது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை.

இதனால் மினரல் குடிநீரை தான் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும்.

மின்கம்பத்தை இடமாற்றுங்க


-கருப்பசாமி, குடியிருப்பாளர்: நாடார் தெருவின் கிழக்கு பகுதியின் மையப் பகுதியில் மின்கம்பம் இருப்பதால் ஆட்டோக்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.

பேரூராட்சியில் கோரிக்கை


-பழனியம்மாள், வார்டு உறுப்பினர்: வார்டில் உள்ள வாறுகால்கள் மேம்படுத்துதல், சேதமடைந்த தண்ணீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், நாடார் பஜாரில் பயணியர் நிழற்குடை குடை அமைத்தல், ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைத்தல், வீடுகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குதல், தெருவில் பொது குடிநீர் குழாய் அமைத்தல் உட்பட பல கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

இதில் தொட்டிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us