ADDED : ஜூன் 23, 2025 05:34 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அச்சம் தவிர்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்சந்தர், செண்பகவல்லி, கூலி தொழிலாளர்கள். இத் தம்பதியின் மகன் சந்தோஷ் 12, ஏழாம் வகுப்பு படித்து வந்தான். பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது மகனை காணாமல் தேடினர்.
அப்போது மதியம் நண்பர்களுடன் அங்குள்ள கண்மாயில் பரிசலில் ஏறி விளையாடிய போது தண்ணீரில் மூழ்கி விட்டதாக சிறுவர்கள் கூறினர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு மீட்பு துறையினர் பல மணி நேரம் தேடியதில், மாணவர் சந்தோஷ் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதனை செய்ததில் மாணவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.