Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நேஷனல் கல்லுாரியில் மாநில வினாடி வினா போட்டி

நேஷனல் கல்லுாரியில் மாநில வினாடி வினா போட்டி

நேஷனல் கல்லுாரியில் மாநில வினாடி வினா போட்டி

நேஷனல் கல்லுாரியில் மாநில வினாடி வினா போட்டி

ADDED : அக் 18, 2025 03:37 AM


Google News
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான 11 வது மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் காளிதாச முருகவேல் கூறியதாவது: நேஷனல் பொறியியல் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான 11 வது மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் நவ.6ல் நடக்கிறது. போட்டியின் முதல் பரிசு ரூ 25,000 , 2ம் பரிசு ரூ15,000, 3ம் பரிசு ரூ10,000 ஆறுதல் பரிசாக 10 அணிகளுக்கு தலா ரூ 5000 என ரூ ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் www.nec.edu.in இணைய தள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பள்ளி முதல்வரின் கைெயாப்பத்துடன் கூகுள் பார்ம் https://bit.ly/necquiz2K25 வழியாக பதிவு செய்யலாம். அல்லது அஞ்சல் மூலமாக கல்லுாரி முகவரிக்கு அனுப்பலாம்.

பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் நவ.5., நிகழ்ச்சியை சுமந்து சி ராமன் தொகுத்து வழங்குகிறார்.போட்டி குறித்து விபரம் அறிய 7338 625232, 9080 197950 எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us