Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாநில கற்றல் அடைவு ஆய்வுக் கூட்டம்

மாநில கற்றல் அடைவு ஆய்வுக் கூட்டம்

மாநில கற்றல் அடைவு ஆய்வுக் கூட்டம்

மாநில கற்றல் அடைவு ஆய்வுக் கூட்டம்

ADDED : செப் 02, 2025 11:45 PM


Google News
விருதுநகர்; விருதுநகரில் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வுக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 1468 பள்ளிகள் உள்ளன.

இதில் 981 அரசு பள்ளிகள், 453 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3, 5, 8ம் வகுப்பு மாணவர்கள் 29 ஆயிரத்து 353 இந்த அடைவு தேர்வில் கலந்து கொண்டனர். மாவட்டம் மூன்றாம் வகுப்பில் மாநில அளவில் 16 வது இடம், 5ம் வகுப்பில் 11 வது இடம், 8ம் வகுப்பில் 20 வது இடத்தையும் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த தரப்பட்டியலில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 58.5 சதவீதம் பெற்று 18 வது இடத்தை பெற்றுள்ளது. அனைத்து பள்ளிகளும் முதல் இடத்தை பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், இணை இயக்குநர் சுவாமிநாதன், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us