ADDED : ஜூன் 12, 2025 01:54 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தினமலர் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று முதல் குடிநீர் சப்ளை மீண்டும் துவங்கியது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாள் முதல் தற்போது வரை நகரில் சீரான நாட்களில் குடிநீர் சப்ளை நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை சீரான நாட்களில் குடிநீர் சப்ளை செய்யப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர். இதுகுறித்து கடந்த ஜூன் 9ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்து நேற்று முதல் நகரில் மீண்டும் குடிநீர் சப்ளை துவங்கியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினார்.