/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிசிண்டி ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: குடியிருப்போர் முகம் சுளிப்பு பிசிண்டி ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: குடியிருப்போர் முகம் சுளிப்பு
பிசிண்டி ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: குடியிருப்போர் முகம் சுளிப்பு
பிசிண்டி ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: குடியிருப்போர் முகம் சுளிப்பு
பிசிண்டி ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: குடியிருப்போர் முகம் சுளிப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:11 AM
காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டி ஊருணியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பிசிண்டியில் 50 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீர்மட்டம் உயர, ஊரை ஒட்டி ஊருணி வெட்டப்பட்டது. நீர் வரத்து ஆதாரமாக காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஊருணிக்கு வர வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. அவ்வப்போது பெய்த மழைக்கு ஊருணி நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. நாளடைவில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு மழை நீர் வராததால் ஊருணி வறண்டு காணப்பட்டது.
இதையடுத்து ஊரிலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஊருணியில் விட்டனர். தற்போது கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் முகம் சுளிக்கின்றனர். அப்பகுதியில் கோயில், நூலகம், மந்தை இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். துர்நாற்றம், கொசுத் தொல்லையால் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். அத்துடன் நிலத்தடி நீர் மாசுபட்டு, சுவை மாறுகிறது. ஆகவே கழிவு நீரை ஊருணியில் தேங்காதவாறு மாற்று வழித்தடம் ஏற்படுத்தி கடத்தவும், மழை நீரை சேமிக்க வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.