Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

ADDED : ஜன 21, 2024 03:04 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட மூன்று முறை தேதி குறிக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்க இயலாததால் சத்தமின்றி கட்டுமான பணி துவங்கி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையல் சிவகாசி ரோட்டில் நகராட்சி உரக்கடங்கில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக அரசு நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.

இப்பணியை தற்போது விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. உடனடியாக பணிகள் துவங்கி ஒன்றரை வருட காலத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், தொடர் மழையின் காரணமாக அடிக்கல் நாட்டு விழாவிற்கு மூன்று முறை தேதிகள் குறித்தும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் விரைவில் பார்லிமென்ட் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம், அவ்வாறு அறிவிக்கப்பட்டால், பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியில் துவங்க முடியுமா என்ற நிலை உருவானது.

இதனால் அடிக்கல் நாட்டு விழா இல்லாமல்கட்டுமான பணியை துவங்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது மழை நின்று, வெயில் துவங்கி உள்ளதால் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி சத்தமின்றி துவங்கியுள்ளது.

அதிகபட்சம் ஒரு வருட காலத்திற்குள் பணிகள் முடிந்து, 2025 மார்ச் மாதத்திற்குள் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us