/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மின் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
மின் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
மின் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
மின் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
ADDED : ஜூன் 18, 2025 04:03 AM

விருதுநகர்: திருநெல்வேலி மின் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வுக்கான போட்டிகள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் லதா, திருநெல்வேலி செயற்பொறியாளர் பரிமளம் தலைமை வகித்து துவங்கி வைத்தனர். கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் பகுதிகளில் இருந்து மின் பகிர்மான கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
கபடி, வாலிபால், ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற போட்டிகள் இன்று (ஜூன் 18) வரை நடக்கிறது. விளையாட்டு போட்டிகளை அர்ஜூனா விருது பெற்ற கணேசன், முதுநிலை விளையாட்டு அலவலர் ஜெயபால் ஆகியோர் மேற்பார்வையில் நடக்கிறது.