ADDED : மே 13, 2025 06:48 AM

சிவகாசி: சிவகாசியில் பேப்பர் மெர்ச்சண்ட் அசோசியேஷன் சார்பில் இந்திய ராணுவத்தின் ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை பாராட்டியும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும் ஊர்வலம் நடந்தது.
அசோசியேஷன் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் காமராஜர் பூங்கா, முருகன் கோயில், ரத வீதிகளை சுற்றி மீண்டும் அலுவலகத்தில் முடிந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடியை ஏந்தி, துணிச்சலான இதயங்கள் வலிமையான தேசம், ஆப்பரேஷன் சிந்துார் நாட்டின் பெருமை, இந்திய ராணுவத்திற்காக ஒன்றுபடுவோம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.