ADDED : மார் 24, 2025 06:17 AM
திருச்சுழி: திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை அருகில் பாம்பு இருப்பதை பார்த்து மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.
திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. இடைவேளையின் போது கழிவறைக்கு சென்ற மாணவிகள் அங்கு பதுங்கி இருந்த பாம்பை பார்த்து அலறினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் கழிப்பறையில் பதுங்கி இருந்த 4 அடி நீள சாரப் பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பாம்பு புகுந்ததை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். தொடர்ந்து இதே சம்பவம் நடப்பதால் பள்ளியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.