/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருத்தங்கலில் மெயின் ரோட்டில் திறந்த நிலையில் சாக்கடை பாலம்திருத்தங்கலில் மெயின் ரோட்டில் திறந்த நிலையில் சாக்கடை பாலம்
திருத்தங்கலில் மெயின் ரோட்டில் திறந்த நிலையில் சாக்கடை பாலம்
திருத்தங்கலில் மெயின் ரோட்டில் திறந்த நிலையில் சாக்கடை பாலம்
திருத்தங்கலில் மெயின் ரோட்டில் திறந்த நிலையில் சாக்கடை பாலம்
ADDED : ஜன 28, 2024 07:01 AM

சிவகாசி : திருத்தங்கல் பஜாரில் மெயின் ரோட்டில் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ள சாக்கடை பாலத்தால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.
திருத்தங்கல் மெயின் பஜாரில் விருதுநகர் செல்லும் ரோட்டில் சாக்கடை பாலம் உள்ளது. இதனைக் கடந்து தான் ஏாளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடந்து, சைக்கிளில் செல்கின்றன. மேலும் சிவகாசிக்கு வரும் அனைத்து வாகனங்களும் இதனை கடந்து தான் வரவேண்டும்.
சாக்கடை பாலம் சேதம் அடைந்து திறந்த நிலையில் மிகப்பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஆக்கிரமிப்பினால் ரோடும் குறுகி இருப்பதால் வாகனங்கள் எளிதில் விலகிச் செல்ல முடியவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.
இரவில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் தட்டு தடுமாறியே செல்ல வேண்டி உள்ளது. மேலும் அதில் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகின்றது. தவிர பாலத்தின் தடுப்புச் சுவரும் சேதமடைந்துள்ளது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.