ADDED : செப் 04, 2025 04:03 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எளிதில் சென்று வர ஏதுவாக சர்வீஸ் ரோடு கோரிக்கை வைத்து வந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.
விருதுநகர் அருகே பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி முன் மாதிரி பள்ளி போல் பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்கு செய்வதால் பெற்றோர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்வதில், மாணவர்கள் ஏறுவதில் சர்வீஸ் ரோடு இல்லாததால் சிரமம் இருந்தது. இந்நிலையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் பின் பணிகள் துவங்கினர்.
அப்போதும், குடிநீர் வடிகால் வாரிய குழாய் பதிப்பு காரணமாக தாமதமாகி கொண்டிருந்தது. மீண்டும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியதை அடுத்து பணிகள் இரண்டு மாதங்களாக முழுவீச்சில் நடந்து தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.