ADDED : ஜன 28, 2024 07:03 AM

விருதுநகர், : விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிதி ஆயோக்கின் அடல் இன்னோவேஷன் மிஷன், பிரதான், லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன், இன்டஸ் இன்ட் வங்கி ஆகியோர் இணைந்து இன்னோவிஷன் 2023-24 எனும் அறிவியல் கண்காட்சி நடத்தினர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 40 புதிய கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தினர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அடல் இன்னோவேஷன் மிஷனின் இளம் தொழில்முறையாளர் சுமன் பண்டிட், இன்டஸ் இன்ட் வங்கி சி.எஸ்.ஆர்., அதிகாரி ஹேமாங்கி பாட்டில், பிரதான் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரநாத், பள்ளக்கல்வித்துறையின் உதவி திட்ட அலுவலர் சிவசக்தி கணேசன் பங்கேற்றனர்.