ADDED : ஜூன் 30, 2025 04:58 AM
பயிற்சி பட்டறை
விருதுநகர்: அருப்புக்கோட்டை நோபிள் மகளிர் கல்லுாரியில் நோபிள் தொழில் பயிற்சி மையம் சார்பில் பேஸ் ப்ரெட் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. மாணவி அபர்னாஸ்ரீ வரவேற்றார். கல்லுாரி கல்வி குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். முதல்வர் மகேஸ்வரி, என்.சி.டி.சி., ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகார்த்திகா, லிங்கடு இன் பயிற்சியாளர் ரிஷனி வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகள், உத்திகளை மாணவர்களுக்கு செயல்முறையாக விளக்கினர். மாணவி பர்ஹானா நன்றிக்கூறினார்.
விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., போதை பொருள் எதிர்ப்புக்குழு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உதவிப் பேராசிரியர் பாலசரஸ்வதி, மாணவிகள் போதை பொருள் ஒழிப்புக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சிங்கப்பூரை சேர்ந்த சைபர் வால்ட், கோயம்புத்துார் லெர்ன்லைக் நிறுவனங்களுடன் தொழில்துறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நிர்வாக அதிகாரிகள் தீபக் ரவிக்குமார், ராஜ் பாபு குணசீலன் கல்லுாரியின் துறை சார்ந்த தலைவர்களுடன் பயிற்சி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கினர். கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அனுசுயா, வேலைவாய்ப்பு அதிகாரி உத்ரா, ரத்தினகுமாரி, அழகு லட்சுமி உடன் இருந்தனர்.