/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துார் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி சாத்துார் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
சாத்துார் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
சாத்துார் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
சாத்துார் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
ADDED : செப் 02, 2025 05:35 AM
சாத்துார் : சாத்துார் காய்கறி மார்க்கெட்டில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் சிவன் கோயில் மாட வீதியில் நகராட்சியின் பிரதான காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நகர் ,கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இதனால் காலை முதல் மாலை வரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள வீதி 30 அடி அகலம் உள்ள தெருவாகும். ஆனால் தற்போது தனியார் , நகராட்சி அனுமதி பெற்ற வியாபாரிகள் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்த நிலையில் தற்போது 3அடி பாதையாக சுருக்கி விட்டது.
மார்க்கெட்டுக்கு வரும் முதியவர்கள் பெண்கள் இட நெருக்கடியில் சிக்கி அவதிப்படும் நிலை உள்ளது. காய்கறிகள் மளிகை சாமான் வாங்கிக் கொண்டு திரும்பும்போது ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் முட்டி மோதி நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வருகிறது.சில சமயங்களில் கைகலப்பும் ஏற்பட்டு விடுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் பெட்டிக்கடைகளையும் அகற்ற வேண்டும் என மக்கள் பல முறை நகராட்சியில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் நாளுக்கு நாள் காய்கறி மார்க்கெட் பகுதியில் நெரிசல் அதிகரித்து வருகிறது.இனியும் காலம் தாழ்த்தாது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.