/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தண்ணீர் தொட்டியில் முளைத்த அரச மரம்-- மறுவாழ்வு தந்த தன்னார்வலர்கள் தண்ணீர் தொட்டியில் முளைத்த அரச மரம்-- மறுவாழ்வு தந்த தன்னார்வலர்கள்
தண்ணீர் தொட்டியில் முளைத்த அரச மரம்-- மறுவாழ்வு தந்த தன்னார்வலர்கள்
தண்ணீர் தொட்டியில் முளைத்த அரச மரம்-- மறுவாழ்வு தந்த தன்னார்வலர்கள்
தண்ணீர் தொட்டியில் முளைத்த அரச மரம்-- மறுவாழ்வு தந்த தன்னார்வலர்கள்
ADDED : ஜூன் 13, 2025 11:58 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் பொன் விழா மைதானம் அருகே நகராட்சி தண்ணீர் தொட்டி அருகே ஓங்கி வளர்ந்த அரச மரத்தை தன்னார்வலர்கள் இணைந்து மறு நடவு செய்து உயிர்பித்தனர்.
ராஜபாளையம் நகராட்சி 13வது வார்டு கவிமணி தேசிய விநாயகம் தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போர்வெல்லுடன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட சிமெண்ட் மேடை மற்றும் மின் மீட்டர் பெட்டி இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பறவைகள் எச்சத்தின் மூலம் அரச மரக்கன்று முளைத்தது. சிமெண்ட் மேடையிலேயே தற்போது வரை வேர் விட்டு 25 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து நின்றது.
கடந்த ஓராண்டாக தண்ணீர் தொட்டி பயன்பாடு இன்றி இருந்ததால் நகராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டியும் இடையூறாக இருந்த அரச மரமும் அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பரியாவரன் நண்பர்கள், இல்லத்துப் பிள்ளைமார் இளைஞர் சங்கம் இணைந்து தண்ணீர் தொட்டி மேடையில் வளர்ந்திருந்த 25 அடி உயர அரச மரத்தை பக்கவாட்டுக் கிளைகளை வெட்டி வேருடன் மீட்டு பொன்விழா மைதானம் அருகே மறு நடவு செய்தனர்.
இச்செயல் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டு பெற்றுள்ளது.