/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அமீர்பாளையத்தில் ரோடு ஓரம் குப்பை எரிப்பதால் சிரமம் அமீர்பாளையத்தில் ரோடு ஓரம் குப்பை எரிப்பதால் சிரமம்
அமீர்பாளையத்தில் ரோடு ஓரம் குப்பை எரிப்பதால் சிரமம்
அமீர்பாளையத்தில் ரோடு ஓரம் குப்பை எரிப்பதால் சிரமம்
அமீர்பாளையத்தில் ரோடு ஓரம் குப்பை எரிப்பதால் சிரமம்
ADDED : மே 26, 2025 02:01 AM
சாத்துார்: சாத்துார் அமீர்பாளையத்தில் ரோடு ஓரம் குப்பைகள் எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார்கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ளது அமீர் பாளையம் அயன் சத்திரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மெயின் ரோட்டில் ஓரத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
சத்திரப்பட்டி ஒ.மேட்டுப் பட்டி ஒத்தையால் சடையம்பட்டி பெரிய கொல்லப்பட்டி வன்னிமடை என சாத்துாருக்கு தென் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் இவ்வழியாக வே சாத்துார் வருகின்றனர்.
காலை, மாலை நேரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிக அளவில் குப்பைகள் சேரும்பொழுது துாய்மை பணியாளர்கள் அவற்றை தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்ணில் புகையால் எரிச்சல் ஏற்படுவது உடன் தற்போது திடீரென வீசும் சூறாவளி காற்றுக்கு நெருப்பு சுவாலை வாகன ஓட்டிகளை தாக்கியும் வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும்.