/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் மண் ரோடுகளால் மீட்புப் பணிகளில் தாமதம்பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் மண் ரோடுகளால் மீட்புப் பணிகளில் தாமதம்
பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் மண் ரோடுகளால் மீட்புப் பணிகளில் தாமதம்
பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் மண் ரோடுகளால் மீட்புப் பணிகளில் தாமதம்
பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் மண் ரோடுகளால் மீட்புப் பணிகளில் தாமதம்
ADDED : ஜன 29, 2024 04:57 AM
சிவகாசி: மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் விபத்து காலங்களில் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. ஆலை உரிமையாளர்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் மெயின் ரோட்டில் இருந்து விலகி நகருக்கு வெளியே காட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளன.
சிவகாசி பகுதியில் நாரணாபுரம், அனுப்பன்குளம், மாரனேரி, செங்கமலப்பட்டி, வெம்பக்கோட்டை, வெற்றிலையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளுக்கு செல்ல முறையான ரோடு வசதி இல்லை. புதர்களுக்கு இடையே சிறிய மண் பாதை மட்டுமே உள்ளது.
சிறிய மழை பெய்தாலும் தொழிலாளர்களை ஏற்றி வரும் பட்டாசு ஆலை வாகனமே செல்ல முடியாது. ஏனெனில் பாதை முழுவதும் சகதியாக மாறிவிடுகிறது. பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராமல் துரதிஷ்டவசமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோன்ற நேரங்களில் உடனடியாக மீட்டுப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படுகின்றது.
கடந்த காலங்களில் சில பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட போது மழை பெய்து பாதை சகதியாக மாறியதால் உடனடியாக மீட்புப் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முறையான பாதை வசதி இல்லாமல் மீட்பு பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உயிர் இழப்புகளை தடுக்க முடியவில்லை.
எனவே காட்டுக்குள் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்றார் போல ரோடு வசதியை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.