Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாலருவி ரயிலில் குளிர்சாதன பெட்டி

பாலருவி ரயிலில் குளிர்சாதன பெட்டி

பாலருவி ரயிலில் குளிர்சாதன பெட்டி

பாலருவி ரயிலில் குளிர்சாதன பெட்டி

ADDED : ஜூன் 27, 2025 02:57 AM


Google News
விருதுநகர்:துாத்துக்குடி -- பாலக்காடு இடையே தினமும் இயக்கப்படும் பாலருவி ரயில்களில் (16791/16792) ஒரு பொதுப் பெட்டிக்கு பதில் ஜூலை 4 முதல் ஒரு மூன்றடுக்கு ஏ.சி., படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு மூன்றடுக்கு ஏ.சி., படுக்கை வசதி பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள் திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை, புனலுார், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் வழியாக இயக்கப்படுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us