/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம் செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
ADDED : செப் 20, 2025 03:36 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ திருவிழா செப். 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று காலை 6:45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை மண்டபம் எழுந்தருளல், இரவு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.
அக். 2 காலை 7:40 மணிக்கு செப்பு தேரோட்டம், அக். 7 மாலை 5:30 மணிக்கு கோபால விலாசத்தில் புஷ்ப யாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.
நவராத்திரி உற்ஸவம் செப். 23 முதல் 9 நாட்கள் ஆண்டாள் நவராத்திரி கொலு உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் மாலை 6:30 மணிக்கு கல்யாண மண்டபத்தில் ஆண்டாள் கொலு வீற்றிருத்தல் நடக்கிறது. அக். 1ல் சரஸ்வதி பூஜை, 2ல் விஜயதசமி, ரெங்கமன்னார் பாரிவேட்டை நடக்கிறது.