ADDED : ஜன 11, 2024 05:09 AM
சிவகாசி, : வெம்பக்கோட்டை தாலுகா கோபாலபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், பொதுமக்களின் குரல் கேட்கும் முகாம் நடந்தது.
ரகுராமன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். சாத்துார் ஆர்.டி.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை தாசில்தார் முத்து பாண்டீஸ்வரி வரவேற்றார். 615 நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தோட்டக்கலை துறை, விவசாயத் துறை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அனிதா நன்றி கூறினார்.