/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாதம் இருமுறை கிராமங்களில் உழவரை தேடி திட்ட முகாம்கள் மாதம் இருமுறை கிராமங்களில் உழவரை தேடி திட்ட முகாம்கள்
மாதம் இருமுறை கிராமங்களில் உழவரை தேடி திட்ட முகாம்கள்
மாதம் இருமுறை கிராமங்களில் உழவரை தேடி திட்ட முகாம்கள்
மாதம் இருமுறை கிராமங்களில் உழவரை தேடி திட்ட முகாம்கள்
ADDED : மே 31, 2025 11:26 PM
விருதுநகர்: வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு:
2025-26ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டின்படி மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வணிகம், விதை சான்று, சார்பு துறைகளான கால்நடை, கூட்டுறவு, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு வேளாண்மையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்துறை, சார்பு துறைகளின் திட்டங்களையும் எடுத்துக் கூறி அவர்கள்பயன்பெறும் வகையில் மாதம் இருமுறை, ஒவ்வொரு 2வது, 4வது வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும்ஓராண்டு காலத்திற்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்று முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.