/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம் அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம்
அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம்
அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம்
அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம்
ADDED : செப் 22, 2025 03:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால் பஸ்சில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், ரோட்டில் வரும் வாகனங்கள் விபத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் ஒவ்வொரு நகரில் இருந்து பல்வேறு டவுன் பஸ்களும், மதுரை, தேனி, கோவில்பட்டி, தென்காசி, திருநெல்வேலி போன்ற வெளிமாவட்ட நகரங்களுக்கும் பல தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது.
இப்பஸ்களில் போதிய அனுபவம் இல்லாத, குறைந்த வயதுடைய டிரைவர்கள் தான் பஸ்களை இயக்கி வருகின்றனர். இவர்கள் அதிவேகத்தில் பஸ்சை இயக்குவதாலும், திடீரென பிரேக் போடுவதாலும் வாசலில் நின்று பயணிப்போர் தவறி விழும் அபாயம் உள்ளது.
முன்பு மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி வரை இயங்கிய பஸ்களின் நேரங்கள் மாற்றி அமைக்காமல் இயக்குவதாலும், போக்குவரத்து நெருக்கடியாலும் அதிவேகத்தில் தனியார் பஸ்கள் செல்லும் நிலை உள்ளது.
மேலும் அரசு பஸ்கள் போன்று தனியார் பஸ்களில் கதவுகள் இல்லாததால் பயணிகள் தவறி விழும் சம்பவங்கள் நடக்கிறது.
இதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.