விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ சார்பில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் உள்பட பல கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று போராட்ட ஆயத்த மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்தையா, வைரமுத்து, கருப்பையா முன்னிலை வகித்தனர்.
பிப். 15ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம், பிப். 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத்தலைவர் விஜயபாலன் நன்றி கூறினார்.