ADDED : மார் 26, 2025 05:51 AM

சாத்துார், : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் 16வது ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி இயக்குனர் கோபால்சாமி தலைமை வகித்தார். பேராசிரியர் வசந்தி வரவேற்றார். முதல்வர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் சாந்தலட்சுமி வாழ்த்தினார். ராஜபாளையம் டாக்டர் கு. கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி நிர்வாக குழுஇணைச் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் பெருமாள் சாமி, இயக்குனர் பத்மநாபன், பாலிடெக்னிக் கல்லுாரி ஆலோசகர் சவுரிராஜன். பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.