/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாரவிடுப்பு, லீவு இல்லாமல் தொடர் பணி*பரிதவிப்பில் போலீசார் வாரவிடுப்பு, லீவு இல்லாமல் தொடர் பணி*பரிதவிப்பில் போலீசார்
வாரவிடுப்பு, லீவு இல்லாமல் தொடர் பணி*பரிதவிப்பில் போலீசார்
வாரவிடுப்பு, லீவு இல்லாமல் தொடர் பணி*பரிதவிப்பில் போலீசார்
வாரவிடுப்பு, லீவு இல்லாமல் தொடர் பணி*பரிதவிப்பில் போலீசார்
ADDED : ஜூன் 24, 2025 03:04 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு வாரவிடுப்பு, லீவு கிடைக்காமல் தொடர் பணி வழங்கப்படுகிறது. இதனால் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்க முடியாமல் எஸ்.எஸ்.ஐ., முதல் கடை நிலை போலீசார் வரையுள்ளவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன், ஆயுதப்படை, தனிப்பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கு முறையாக வாரவிடுமுறை அளிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு வாரவிடுமுறை வரும் நாட்களில் கூடுதல் பணி வழங்கப்பட்டு வாரவிடுப்பு மாற்றி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதற்குள் அடுத்த வாரவிடுப்பு வந்து விடுவதால் விடுமுறை நாளில் பணிபுரிந்ததை மாற்றி எடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
மேலும் குடும்பத்தில் பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு கூட விடுப்பு அளிக்கப்படுவதில்லை. மாறாக பணிக்கு வந்து அனுமதி பெற்ற பின் அப்படியே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டி நிலையே உள்ளது.
தங்களுக்கு பணியிட மாறுதல் வேண்டும் என கேட்கும் போலீசாருக்கு குடியிருப்புகள் உள்ள இடத்திற்கு அருகே பணி வழங்கி விடுகின்றனர். ஆனால் வாரவிடுமுறை, விடுப்பு வழங்கப்படுவதில்லை. தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறினாலும் கோரிக்கைக்கு உயர்அதிகாரிகள் செவிசாய்க்காமல் உள்ளதாக போலீசார் புலம்புகின்றனர்.
இதனால் எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டுக்கள், போலீசார் பலரும் விடுமுறை கிடைக்காமல் தொடர்ந்து பணிபுரிந்து மனசோர்வுக்கு ஆளாகியுள்ளனர். குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதில்போலீசார் முதல் ஏட்டுக்கள் வரை வாரவிடுமுறை என்பது கானல் நீராகவே உள்ளது. எஸ்.எஸ்.ஐ., ஆக இருந்தால் தான் வாரவிடுமுறை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே எஸ்.எஸ்.ஐ., முதல் கடை நிலை வரையுள்ள போலீசாருக்கு வாரவிடுமுறை, தேவையான விடுப்பு வழங்கி பணிச்சுமையை போக்கி குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கி மன நிம்மதியாக பணிபுரிய மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.