ADDED : செப் 13, 2025 03:39 AM
துாய்மை பணியாளர் பலி
சிவகாசி: நேரு காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் 40. இவர் மாநகராட்சி துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர் அம்மன் நகரை சேர்ந்த காளிமுத்து 44, டூ வீலர் ஓட்ட பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். திருத்தங்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது புதுக்கோட்டை கீழத்தெரு வடக்கத்தியன் ஓட்டி வந்த கார் மோதியதில் முருகேசன் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
----- இலங்கை அகதி பலி
சிவகாசி: ஆனைக்குட்டம் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் பேரின்பராஜ் 25. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டா சு தயாரி த்தவர் மீது வழக்கு
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை அருகே வல்லம்பட்டியை சேர்ந்தவர் முரசொலி மாறன் இவர் புதியதாக கட்டி வரும் வீட்டில் பேன்சி ரக வெடிகள் தயாரித்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இன்ஸ்பெக்டர் நம்பி ராஜன், எஸ்.ஐ.,பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் அவர் வீட்டுக்கு சென்றனர். போலீசை கண்டதும் அவர் தப்பினார். வீட்டில் இருந்த பேன்சி ரக வெடிகள் உபகரணங்கள், பட்டாசு திரிகளை பறிமுதல் செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.-