ADDED : ஜூன் 05, 2025 12:51 AM
புகையிலை பறிமுதல்
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை தெற்கு அப்பணம்பட்டி விலக்கில் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக டூவீலரில் வந்த ஏழாயிரம் பண்ணை அஜித்குமார் 27, அருண்பாண்டி 21, ஆகியோர் ரூ.6450 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டை கொண்டு வந்தது தெரிந்தது. ஏழாயிரம்பண்ணை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
வாலிபர் பலி
சாத்துார்: சாத்துார் நந்தவனப் பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அஜய் 24. திருமணம் ஆனவர். 7 மாத பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து மது குடித்ததால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. விஷமருந்து குடித்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.