ADDED : ஜூன் 23, 2025 05:32 AM
நரிக்குடி, : நரிக்குடி அ.முக்குளம், பிள்ளையார் குளம் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார அரசு மருத்துவ அலுவலர் விக்னேஷ், சுகாதார ஆய்வாளர் வீரேந்திரன், மலேரியா காய்ச்சல் பரவும் முறைகள், வயிற்றுப்போக்கு, காய்ச்சலை உண்டாக்கும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், வளர் இளம் பெண்களுக்கான அரசின் சுகாதாரத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 2030ம் ஆண்டிற்குள் மலேரியா இல்லாத நாடாக உருவாக்கும் பொருட்டு அனைவரும் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.