ADDED : மே 29, 2025 12:35 AM
ராஜபாளையம்; விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருத்த பாண்டியன் 25, என்பவரை தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் இரவு கோயில் தோரண வாயில் முன்பு லேசான சத்தத்துடன் தீ எரிந்தது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தோரண வாயில் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிந்தது.
தெற்கு போலீசார் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த கருத்த பாண்டியன் 25, என்பவரை கைது செய்தார். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.