/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலண்டர், திருமண அழைப்பிதழக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வேண்டும் மத்திய நிதியமைச்சரிடம் மனு காலண்டர், திருமண அழைப்பிதழக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வேண்டும் மத்திய நிதியமைச்சரிடம் மனு
காலண்டர், திருமண அழைப்பிதழக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வேண்டும் மத்திய நிதியமைச்சரிடம் மனு
காலண்டர், திருமண அழைப்பிதழக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வேண்டும் மத்திய நிதியமைச்சரிடம் மனு
காலண்டர், திருமண அழைப்பிதழக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வேண்டும் மத்திய நிதியமைச்சரிடம் மனு
ADDED : செப் 20, 2025 11:23 PM
சிவகாசி: காகிதம் மூலம் உற்பத்தி செய்யப்படும் காலண்டர், டைரி, திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட பொருட்களை 5 சதவீத ஜி.எஸ்.டி., அடுக்கில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் காலண்டர் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.
மதுரையில் நடந்த உணவு பொருள் வியாபாரிகள் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த காலண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெயசங்கர், நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ஜி.எஸ்.டி., சீரமைப்பு மூலம் காகிதத்திற்கு 18 சதவிகித வரியும், காகிதம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு 18, 5 , 0 என பல்வேறு வரி அடுக்குகளில் உள்ளது வாடிக்கையாளர்களிலேயே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது அச்சுத் தொழிலின் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
இதனால் காகிதம் மூலம் உற்பத்தி செய்யப்படும் காலண்டர், டைரி, திருமண அழைப்பிதழ்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் 5 சதவிகித வரி அடுக்கின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.