ADDED : ஜூன் 25, 2025 08:17 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் ஜனகராஜ், பொருளாளர் திருமலைக்கனி, இணைச் செயலாளர் செல்லமுத்து ஆகியேர் வரவேற்று, சங்கத்தின் சார்பில் காப்பாளர் பதவி உயர்வு, விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்தனர்.