/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இடிந்து விழும் நிலையில் பெரும்பள்சேரி குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் பெரும்பள்சேரி குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் பெரும்பள்சேரி குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் பெரும்பள்சேரி குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் பெரும்பள்சேரி குடிநீர் தொட்டி
ADDED : ஜூன் 30, 2025 05:01 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரும்பள்சேரி தெருவில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்டது பெரும்பள்சேரி வடக்கு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் தொட்டியின் பில்லர்கள் அனைத்தும் சேதம் அடைந்து நாளுக்கு நாள் பழுதடைந்து வருகிறது. இதனால் எப்போது இடிந்து விழுந்து விடுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியை சீரமைக்கவோ அல்லது இடித்துவிட்டு புதிதாக கட்டித் தரவோ ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரும்பள்சேரி தெரு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.