Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி

மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி

மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி

மண் ரோடால் அவதி; சேதமான நிழற்குடை சாத்துார் அச்சங்குளத்தில் மக்கள் அவதி

ADDED : ஜூன் 14, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
சாத்துார்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சல்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அச்சங்குளத்தில் மண் ரோடு, அள்ளப்படாத வாறுகால், சேதமான நிழற்குடை, காட்சி பொருளான குடிநீர் குழாய்கள் என பல்வேறு சிரமத்தில் தவிக்கின்றனர் அம்மக்கள்.

அச்சங்குளத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏழு தெருக்கள் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் பட்டாசு ஆலைகளையே நம்பி உள்ளனர்.

7 தெருக்களிலும் முறையான ரோடு வசதி இல்லை.கரடு முரடாகவும் மண்சாலையாகவும் உள்ளது.மூன்று தெருக்களில் மட்டும் கழிவு நீர் செல்வதற்கு வாறுகால் அமைத்துள்ளனர்.

இந்த வாறுகால் முறையாக அமைக்கப்படாததால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரோட்டில் இருபுறத்தையும் மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுவது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அச்சங்குளத்தில் இருந்து இரவார்பட்டி, சல்வார்பட்டி செல்வதற்காக வைப்பாற்றில் பாலம் ஒன்று கட்டப்பட்டது.

இந்தப் பாலம் இடிந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில் அருகில் உள்ள ஊருக்கு செல்லக்கூட மக்கள் சாத்துார் வந்து 15 முதல் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஊராட்சியில் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது ஆனால் புதிய குடிநீர் குழாயில் இன்று வரை தண்ணீர் வரவில்லை.

புதிய குடிநீர் குழாய் காட்சி பொருளாகவே உள்ளது.

மக்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் குடிநீரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

ரோடு வசதி தேவை


தலைட்சுமி, குடும்பத் தலைவி: ஒரு தெருவில் மட்டுமே பேவர் பிளாக் ரோடு அமைத்து உள்ளனர். எல்லா தெருக்களும் பள்ளமாகவும் மண் ரோடாகவும் உள்ளது. மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.

கழிவுநீர் செல்லவில்லை


முத்துச்செல்வி, குடும்பத் தலைவி: நடுத்தெரு வடக்கு தெருவில் இருந்து புதியதாக வாறு கால் கட்டியுள்ளனர். இந்த வாறுகால் 3 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. முறையாக ஊருக்கு வெளியே சென்று கழிவுநீர் சேர வேண்டும். ஆனால் வாறுகாலில் கழிவுநீர் செல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.

சேதமடைந்த நிழற்குடை


வளர்மதி, குடும்பத் தலைவி: சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய குழு தலைவரிடமும் கலெக்டரிடம் மனு கொடுத்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அச்சங்குளம் பயணிகள் நிழற்குடை தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது.

காட்சி பொருளாக குழாய்


தங்கமாரி, குடும்பத் தலைவி: ஊராட்சியில் வீட்டிற்கு வீடு புதிதாக குடிநீர் குழாய் அமைத்து ஓராண்டு ஆகிறது. இன்று வரை புதிய குழாயில் குடிநீர் வரவில்லை. இது காட்சி பொருளாகவே உள்ளது. பழைய குடிநீர் குழாயில் மட்டுமே குடிநீர் வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us