/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டெல்டா மாவட்ட கோயில் நகரங்களுக்கு ரயில் வசதி தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு டெல்டா மாவட்ட கோயில் நகரங்களுக்கு ரயில் வசதி தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
டெல்டா மாவட்ட கோயில் நகரங்களுக்கு ரயில் வசதி தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
டெல்டா மாவட்ட கோயில் நகரங்களுக்கு ரயில் வசதி தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
டெல்டா மாவட்ட கோயில் நகரங்களுக்கு ரயில் வசதி தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 15, 2025 02:04 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:டெல்டா மாவட்டங்களில் உள்ள கோயில் நகரங்களுக்கு சென்று வர வசதியாக நாகர்கோவில், செங்கோட்டையிலிருந்து போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் வசிக்கின்றனர். அங்குள்ள கோயில் நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர் உள்ளிட்டவற்றுக்கும் இங்கிருந்து அதிகமாக செல்கின்றனர். ஆனால் பகல் மற்றும் இரவு நேர ரயில்கள் இல்லாமல் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணித்து வருகின்றனர்.
திருச்செந்துாரில் இருந்து புறப்படும் செந்துார் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் தாம்பரம் --அந்தியோதயா ரயில்களில் மட்டும் தான் இரவில் பயணிக்க முடிகிறது. இதிலும் அதிக அளவில் சென்னை பயணிகளே பயணிப்பதால் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை போன்ற நகரங்களுக்கு எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை.இருபகுதிகளையும் இணைக்கும் வகையில் போதிய எண்ணிக்கையில் பகல், இரவு நேரங்களில் ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கவில்லை.
எனவே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை வழியாகவும், செங்கோட்டையில் இருந்து தென்காசி, ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புகோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாகவும் தினமும் பகல், இரவு நேர ரயில்கள் டெல்டா மாவட்டங்களுக்கு இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.