/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
திருப்பதிக்கு வேண்டும் தினசரி ரயில் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 11, 2025 02:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:திருநெல்வேலி, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு தினமும் ரயில்கள் இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் அடிக்கடி திருப்பதி சென்று வருகின்றனர்.
ஆனால் தினசரி ரயில்கள் இல்லை. மதுரை வழியாக திருப்பதி வழித்தடத்தை கடந்து செல்லும் வோகா, கச்சக்குடா, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி, சார்லபள்ளி, மும்பை சி.எஸ்.எம்.டி, மும்பை எல்.டி.டி. ஆகிய ரயில்களில் தான் பயணிக்க வேண்டி உள்ளது.
இதிலும் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக ஒரு சில ரயில்களும், கரூர், ஈரோடு, சேலம் வழியாக சில ரயில்களும் இயங்குகின்றன.
இந்த ரயில்களில் தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு செல்ல டிக்கெட் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பல நேரங்களில் காத்திருப்பு பட்டியலில் தான் இருக்கிறது.
இதை தவிர்க்க திருநெல்வேலியில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக ஒரு ரயிலும், மதுரையிலிருந்து திண்டுக்கல் கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி வழியாகவும் தினசரி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.