Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின் மோட்டார் பழுதால் கம்பிக்குடியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்

மின் மோட்டார் பழுதால் கம்பிக்குடியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்

மின் மோட்டார் பழுதால் கம்பிக்குடியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்

மின் மோட்டார் பழுதால் கம்பிக்குடியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்

ADDED : மே 21, 2025 06:24 AM


Google News
காரியாபட்டி; காரியாபட்டி அருகே கம்பிக்குடி ஊராட்சியில் மின் மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

காரியாபட்டி பகுதியில் ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்த பின் தற்போது கிராமங்களில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு, சுகாதாரம், அடிப்படை வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். பல்வேறு கிராமங்களில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டு உள்ளது.

கம்பிக்குடி ஊராட்சியில் மின் மோட்டார் பழுது பார்க்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லை.

மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். புழக்கத்திற்கான தண்ணீரும் கிடைக்கவில்லை.

தண்ணீருக்காக மக்கள் அங்கும் இங்கும் அலைகின்றனர். குடிநீர் எடுக்க நீண்ட தூரம் சென்று வர வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

ஊராட்சிகளுக்கு தேவையான நிதி அளித்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us