Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குறைந்தழுத்த மின்சாரத்தால் சாத்துார் சுற்றுப்புற மக்கள் அவதி

குறைந்தழுத்த மின்சாரத்தால் சாத்துார் சுற்றுப்புற மக்கள் அவதி

குறைந்தழுத்த மின்சாரத்தால் சாத்துார் சுற்றுப்புற மக்கள் அவதி

குறைந்தழுத்த மின்சாரத்தால் சாத்துார் சுற்றுப்புற மக்கள் அவதி

ADDED : ஜூன் 24, 2024 01:30 AM


Google News
சாத்துார் : சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் மிகுந்தஅவதிப்பட்டனர்.

சாத்துார், படந்தால், வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி உள்ளிட்டபகுதிகளில் நேற்று முன் தினம் மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சூறாவளி வீசியது. இதனால் மின்சார உயர் அழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பலஇடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே சரி செய்யப்பட்டு மின்சாரம் வினியோகம் வழங்கப்பட்டது.சத்திரப்பட்டி சடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வோல்டேஜ் ஏற்ற இறக்கத்துடன் வந்தது. இதனால் டியூப் லைட் , மின்விசிறிகள் திடீரென வேகமாகவும் அதிக ஒளியுடனும் எரிந்தன. பின்னர் சிறிது நேரத்தில் மிக மிக குறைந்த வேகத்தாலும், ஒளியிலும் இயங்கின.இதனால் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. காற்று வீசும் காலங்களில் இது போன்ற மின்சார ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் மின்சார வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us