/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் வாகனத்தில் டேங்கர் சேதம் வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி குடிநீர் வாகனத்தில் டேங்கர் சேதம் வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி
குடிநீர் வாகனத்தில் டேங்கர் சேதம் வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி
குடிநீர் வாகனத்தில் டேங்கர் சேதம் வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி
குடிநீர் வாகனத்தில் டேங்கர் சேதம் வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 11, 2025 07:13 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனத்தில் டேங்கர் சேதம் அடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் பிச்சாண்டி தெரு, தட்டாவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது போன்ற பகுதிகளுக்கு மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனத்தில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் குடிநீர் கொண்டு செல்லும் வாகனத்தின் டேங்கர் முழுமையாக துருப்பிடித்துள்ளது. இந்த வாகனம் வாங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதன் அடிப்பகுதி சேதம் அடைந்து குடிநீர் வீணாகிறது.
மேலும் டேங்கர் முழுவதுமே துருப்பிடித்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிற மக்கள் சேதம் அடைந்த டேங்கரால் குடிநீர் வீணாவதால் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே புதிய குடிநீர் வாகனத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.