/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெண் போலீஸ் எண்ணிக்கை அதிகம் திணறும் நிலையில் ரோந்து பணி பெண் போலீஸ் எண்ணிக்கை அதிகம் திணறும் நிலையில் ரோந்து பணி
பெண் போலீஸ் எண்ணிக்கை அதிகம் திணறும் நிலையில் ரோந்து பணி
பெண் போலீஸ் எண்ணிக்கை அதிகம் திணறும் நிலையில் ரோந்து பணி
பெண் போலீஸ் எண்ணிக்கை அதிகம் திணறும் நிலையில் ரோந்து பணி
ADDED : ஜூன் 21, 2025 11:46 PM
விருதுநகர்:விருதுநகர் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் ஆண் போலீசாரை விட பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ரோந்து பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த திணறும் நிலை உள்ளது.
விருதுநகர் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் 25 பெண் போலீசார் வரை பணிபுரிகின்றனர். ஆண் போலீசார் 12 பேர் வரை பணிபுரிகின்றனர். பெண்களை காட்டிலும் குறைவான ஆண் போலீசாரே உள்ளனர்.
ஊரக போலீஸ் ஸ்டேஷனுக்கு விருதுநகர் பாண்டியன் நகர், லெட்சுமி நகர், சத்திரரெட்டியபட்டி, கே.உசிலம்பட்டி, சிவஞானபுரம், கருப்பசாமி நகர் என பெரிய அளவிலான பகுதிகள் உள்ளடங்கும்.
இரவு பாரா பணியின் போதும் இரு பெண் போலீசாரை இருக்க அறிவுறுத்தி உள்ளனர். அதே போல் ரோந்து பணியின் போதும் இரு பெண் போலீசாரை போக அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் சக போலீசார். இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் நகரை யொட்டி உள்ள வளர்ந்து வரும் பகுதிகள். லட்சுமி நகர் பகுதியில் தற்போது சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ரோந்து அவசியமாக உள்ளது.
மற்ற பகுதிகளில் இன்னும் சி.சி.டி.வி., கேமராக்களே பொருத்தப்படாமல் உள்ளது. இப்பகுதிகளிலோ ரோந்து அத்தியாவசியமாகதேவையாக உள்ளது. மேலும் பாண்டியன் நகர் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த தொடர் ரோந்து அவசியமாக உள்ளது. அதே போல் செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கவும் போலீசாரின் திடீர்ரோந்து முக்கிய தேவையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண ஆண் போலீசாரின் எண்ணிக்கையையும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் அதிகரிக்க வேண்டும்.
மகளிர் ஸ்டேஷன் போல்எண்ணிக்கை உள்ளதால் அட்டவணை தயாரிப்பதில் இருந்து பகுதிவாரியாக பணிகளுக்கு அனுப்புவதை வரை சிரமம் உள்ளது.
ரோந்து பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த பெண் போலீசாரை காட்டிலும்,ஆண் போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே உறுதியான தீர்வை தரும்.