/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நான்கு வழிச்சாலை ரயில் பாதையில் மேம்பாலங்கள் நான்கு வழிச்சாலை ரயில் பாதையில் மேம்பாலங்கள்
நான்கு வழிச்சாலை ரயில் பாதையில் மேம்பாலங்கள்
நான்கு வழிச்சாலை ரயில் பாதையில் மேம்பாலங்கள்
நான்கு வழிச்சாலை ரயில் பாதையில் மேம்பாலங்கள்
ADDED : செப் 13, 2025 03:32 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையத்தில் ரயில்வே பாதையில் மேம்பாலங்கள் அமைக்க அனுமதி தருவதில் ரயில்வே நிர்வாகம் தாமதம் செய்வதால் நான்கு வழி சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதில் அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை பெரும்பாலான ரோடு, மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஆனால், அழகாபுரியில் இருந்து திருமங்கலம் வரை ஒரு சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் நகரங்களில் விருதுநகர்- செங்கோட்டை ரயில்வே வழித்தடம் குறுக்கிடுவதால் அங்கு மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் நடந்துள்ளது.
இதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ள நிலையில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்கு அனுமதி தருவதில் தெற்கு ரயில்வே நிர்வாகம் காலதாமதம் செய்கிறது.
இதனால் முழு அளவில் நான்கு வழிச்சாலையை பயன்பாட்டுக்கு வராத நிலை உள்ளது.
இருந்த போதிலும் ஓரிரு மாதங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு 2026 ஜனவரி மாதம் நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறினார்.