/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குவாரி அமைக்க தோணுகால், தண்டியனேந்தலில் எதிர்ப்பு குவாரி அமைக்க தோணுகால், தண்டியனேந்தலில் எதிர்ப்பு
குவாரி அமைக்க தோணுகால், தண்டியனேந்தலில் எதிர்ப்பு
குவாரி அமைக்க தோணுகால், தண்டியனேந்தலில் எதிர்ப்பு
குவாரி அமைக்க தோணுகால், தண்டியனேந்தலில் எதிர்ப்பு
ADDED : மார் 28, 2025 05:44 AM

காரியாபட்டிl : காரியாபட்டி தோணுகால், தண்டியனேந்தல் கிராமங்களுக்கு அருகில் கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். சமாதான கூட்டத்திலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
காரியாபட்டி தோணுகால், தண்டியனேந்தல் கிராமங்களுக்கு அருகில் கிரானைட் குவாரி அமைக்க கனிம வள உரிமம் பெறப்பட்டது. சில தினங்களுக்கு முன் பூமி பூஜை நடந்தது. அப்போது தண்டியனேந்தல், தோணுகால் கிராமத்தினர் குவாரி நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நேற்று காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை ஆர்.டி.ஓ., கனகராஜ் (பொறுப்பு) தலைமையில், கனிம வள அலுவலர் சுகதாரா ஷீமா, தாசில்தார் மாரீஸ்வரன் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
குடியிருப்புகள் சேதமடையும், நீர் வளம் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் பாதிக்கும், பள்ளி மாணவர்கள் ரோட்டில் நிற்கும்போது வெடி விபத்து ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது என கூறி, குவாரி நடத்தக் கூடாது, ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். மக்களின் கருத்துக்களை கலெக்டர், கோர்ட்க்கு பரிந்துரைத்து பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.