/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED : ஜூன் 10, 2025 12:52 AM

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் கணக்கிடும் பணி நடந்தது.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி,கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள் கணக்கிடும் பணி நடந்தது. மகளிர் சுய உதவி குழு பெண்கள், கோயில் பணியாளர்கள் அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த ஒரு மாத காலத்தில் ரொக்கம் ரூ.45,61,305ம், தங்கம் 166 கிராம், வெள்ளி 685 கிராம் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனர். இந்தத் தொகை உடனடியாக கோயில் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.