ADDED : ஜூன் 24, 2024 01:34 AM
சிவகாசி : சிவகாசி அருகே வடமலாபுரத்தில் லட்சுமியை 70, கழுத்தை நெரித்து கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த காசிமாயனை 25,போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே வடமலாபுரம் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் லட்சுமி .
இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள முள் காட்டிற்குள் சென்றார். வெகு நேரமாகவும் வராததால் அவரை உறவினர்கள் தேடினர். நேற்று காலை 6:00 மணிக்கு முள்காட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். திருத்தங்கல் போலீசார் விசாரித்து வந்தனர். லட்சுமியை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த காசிமாயனை, போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது, பெண்கள் இயற்கை உபாதைக்காக ஒதுங்கும் பகுதியில் காசிமாயன் ஒளிந்திருப்பது வழக்கம். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காசிமாயனை கைது செய்து விசாரித்தோம். லட்சுமி இயற்கை உபாதைக்காக ஒதுங்கும்போது அங்கு வந்த காசிமாயன் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டார். லட்சுமி சத்தம் போடவும் கயிற்றினால் கழுத்தை இருக்கி அவரை கொலை செய்துள்ளார், இவ்வாறு கூறினர்.