/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆக்கிரமிப்பு இடங்களை மீட்காமல் அதிகாரிகள் அலட்சியம்; நகராட்சி, வருவாய் துறையின் மெத்தனத்தால் அவதி ஆக்கிரமிப்பு இடங்களை மீட்காமல் அதிகாரிகள் அலட்சியம்; நகராட்சி, வருவாய் துறையின் மெத்தனத்தால் அவதி
ஆக்கிரமிப்பு இடங்களை மீட்காமல் அதிகாரிகள் அலட்சியம்; நகராட்சி, வருவாய் துறையின் மெத்தனத்தால் அவதி
ஆக்கிரமிப்பு இடங்களை மீட்காமல் அதிகாரிகள் அலட்சியம்; நகராட்சி, வருவாய் துறையின் மெத்தனத்தால் அவதி
ஆக்கிரமிப்பு இடங்களை மீட்காமல் அதிகாரிகள் அலட்சியம்; நகராட்சி, வருவாய் துறையின் மெத்தனத்தால் அவதி
ADDED : ஜன 08, 2025 06:24 AM
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் நகராட்சி, வருவாய் துறைக்கு சொந்தமான இடங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கையகப்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர்.
நகராட்சிகளுக்கு சொந்தமான இடங்கள் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ளன. புறநகர் பகுதிகள் உருவாகுகிற போது அப்பகுதி மக்களின் நன்மைக்காக சமுதாய கூடங்கள் பூங்காக்கள், பொது கழிப்பறைகள் அமைப்பதற்கு தனியாக இடங்கள் ஒதுக்கப்படும். நகராட்சிகள் அனுமதி பெற்று பிளாட்டுகள் அமைக்கிற போது, இது போன்ற வசதிகள் செய்யப்பட்டால் தான் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு பொது பயன்பாட்டிற்க்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒவ்வொரு நகராட்சிக்கும் உள்ளன. இவற்றை நகராட்சிகள் முறையாக கையகப்படுத்தி உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வருவது இல்லை. இதனால் நகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் ஆண்டு கணக்கில் ஆக்கிரமிப்பில் உள்ளன. நகராட்சிகளுக்கு தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் எங்கெங்கு உள்ளன என்பது தெரியாமலேயே உள்ளன. முறையாக பொது பயன்பாட்டிற்கு உரிய இடங்களை ஆய்வு செய்து தாங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் நகராட்சிகள் அலட்சியம் காட்டுகின்றன.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொக்கலிங்கபுரம், நேதாஜி ரோடு, மலையரசன் கோயில் ரோடு, புளியம்பட்டி, தெற்கு தெரு, நேருநகர், பட்டாபிராமர் கோயில் பகுதி, புதிய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொது பயன்பாட்டிற்கான இடங்கள் உள்ளன. கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த இடங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராமர் கோயில் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. தெற்கு தெரு மீனாட்சி தெருவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகராட்சி இடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்ததை, அந்த வார்டு பெண் கவுன்சிலர் ஜெயகவிதாவின் தொடர் முயற்சியால் நகராட்சி கையகப்படுத்தி உள்ளது. இது போன்று நகரில் பல பகுதிகள் உள்ளன.
நகராட்சியின் நகர் அமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை சர்வே எடுத்து இடங்களை கையகப்படுத்தாமல் உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு நிலங்கள் தனியார் வசமாகியுள்ளன.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள நகராட்சிகள், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை கையகப்படுத்த நகர அமைப்புக்கு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்.